Saturday, August 10, 2019

Varalakshmi Pooja @ our home 2019



our home varamalaskhmi pooja @ chennai.

Face, Dress alangara all done by me.

for varamalskhmi pooja pathadhi see the link varamalskmhi 

u will get all details in detailed view.

u can get Amman Face too. 
For orders call or whats app 9940651316









Sidhi Vinayaka Sloka

Pranamya shirasa devam gauri-putram vinayakam |
Bhaktavasam smarennityam ayuh-kamartha-siddhaye || 1 ||

Prathamam vakra-tundam cha eka-dantam dvitiyakam |
Tritiyam krishna-pingaksham, gaja-vaktram chaturthakam || 2 ||

Lambodaram panchamam cha shashtham vikatameva cha |

Saptamam vighna-rajendram dhumra-varnam tathashtamam || 3 ||

Navamam bhala-chandram cha dashamam tu vinayakam |

Ekadashamam gana-patim dvadasham tu gajananam || 4 ||

Dvadashaitani namani trisandhyam yah pathen_narah |

Na cha vighna-bhayam tasya sarva-siddhi-karah prabhuh || 5 ||

Vidyarthi labhate vidyam dhanarthi labhate dhanam |

Putrarthi labhate putranmoksharthi labhate gatim || 6 ||

Japedganapati-stotram shadbhirmasaih phalam labhet |

Samvatsarena siddhim cha labhate natra samshayah || 7 ||

Ashtebhyo brahmanebhyashcha likhitva yah samarpayet |

Tasya vidya bhavetsarva ganeshasya prasadatah || 8 ||

Thursday, August 01, 2019

Nava naga devata sloka

9 Naag Devata Mantra Lyrics in English

Anantam Vasukim Shesham
Padmanabham cha Kambalam
Shankhapalam Dhartarashtram
Taxakam Kaliyam Tatha

Phala Sruthi (Merits of Recital)

Etani Nava Navaami Naganancha Mahatmana
Sayam Patenityam Prathahkaale Visheshita
Tasya Vishabhayam Naasti Sarvatra Vijayaa Bhaveth

Wednesday, July 31, 2019

Gopi Geetha by Sri Vadirajaru

Gopi Geetha  - Sri vadirajaru

nanda gOkulada gOpi kandanendu mOhisalu
mukundana pADidaLu haruShadindali
vRundAvanava sArisi gOvindanna teLagiLisi
bangArada ginDile tandaLu gangi udakava
pItAMbara seragu hiDididda lakShmIpati
gangA yamunA snAnamADi banniri endaLu
anda mAtanu kELi tIvradinda snAnamADi
bandu kuLitaru BrAMbaru naMdana maneyali
daSamaskandha BAgavata parIkShItarAya kELu
SanKOtsadinda nAnu hELuttiddenu
maunadApAtrivaLaga nAnA padArtha baDisi
BrAMbarA eDige tandiTTaLe yaSOdA
iTTanta pAtriyoLu muTTikonDu gOpinAtha
siTTilinda nODidaru brAhmaNaru kRuShNana kaDeyali
kOlukoMDu kOpadiMda bAlakana baDiya baralu
bAgila hinde hOgi aDagida kRuShNanu
aDagidda kRuShNanna eLedukonDu gOpidEvi
oLaga kaTTidaLu magana vajrakaMbaka
oLaga kaTTi tanna magana brAhmaNarannE bEDikonDu
mAdhavA duruLa nIvu snAnake hOgiri
aMda mAtanu kELi tIvradinda snAnamADi
dEvara naivEdya mADi kuLitarAgale
kRuShNArpaNennalu kaTTida kaMbadinda banda
viprarA eDige nintA BaktavatsalA
hiMdaka tirugi nODalu gOvinda bennu hiDididda
gollara maga muTTidanendu ciMtebaTTaru
Pullavadani gOpidEvi tallaNisi edivaLaga
ettakaDe iTTu barale kRuShNanendaLu
nandagOpa tanna magana bagaloLAga ettukonDu
yAru baidaru eMdu kELuttiddanu
anyAyavillade amma nanna baDedaLu
baNNisi baNNisi ramApati aLuta nintAnu|
BUmiya beLaguvA dAvakaDe iddarEnu
kRuShNanendavara manake thaTTanE baruvanu
vAdirAjaru mADidantha bAlalIleyannu
hELi kELidavarige sAyujya padavi koDuva SrI hayavadananu||

Friday, July 05, 2019

Mudra dharane slokagalu

Chakra Mudra

sudarshana mahajwala kotisoorya samaprabha |
agnandhasyame nithyam vishnOrmaargam pradarshaya ||


Shanka mudra


paanchajanya nijadhwana dvamstapaathaka namchaya |
traahimaam paapinam GorasamsaaraarNava paatyinam ||

Tuesday, June 18, 2019

Dhathi Vamana sthothra

1.Hemadri shikarakaram,
Shudha spatika sannibham,
Poorna chandra nibhanam,
Devam dwibujam, Vamanam smareth

2.Padmasanatham devesham,
Chandra mandala madhyagam,
Jwalath kalanala prakhyam,
Tadith koti samaprabham.

3.Soorya koti prathikaasam,
Chandra koti susheethalam,
Chandra mandala madhyastham,
Vishnu mavyaya machutham.

4.Srivathsa kousthuboraskam,
Divya rathna vibhooshitham,
Peethambaradaram devam,
Vana maalaa vibhooshitham.

5.Sundaram pundarikaaksham ,
Kireetena Virajitham,
Shodasa sthree pariyutham,
Samyag apsara gana sevitham.

6.Sanakadhibhir anaischya,
Sthooyamaanam samathatha
Rig yajursaama atharvana vedaayai
Geeyamaanam Janardhanam,

7.Chathurmukhadayai devesai,
Stotra aaradhana thath parai.
Tryambaka Maha devo ,
Nrutyathe yasya sannidhou.

8.Dadhi misranna kavalam,
Rukma pathram cha dakshine,
Kare thu chinthaye dhavaamay,
Peeyusham amalam sudhi.

9.Sadhakaanaam prayaschantham,
anna panam anuthamam,
Brahme muhurthe Choddhaya,
Dhyayed deva madokshajam.
Ayur arogyam , aiswaryam,
Labhathe Chaa anna sampada.

10.Athi suvimala gathram rukmapathrastamannam,
Sulalitha Dhadhi bhandam paninaa dakshinena,
Kalasam amruthapoornam Vaama hasthe dadhaanam,
Tharathi sakala dukhaan Vamanam Bhavadeya.

11.Idham stotram padethyasthu pratha kaale dwijothama,
Aklesad anna sidhyartham , jnana sidhyartham eva cha.

12.Abhra shyama shubra yajopaveethi,
Sath koupeena Peeta Krishnajina sri, ChHathri Dandi Pundareekayathaksha,
Payed devo Vamano Brahmachsai.

13,Ajina danda kamandalu , mekhalaa ruchira,
Pavana Vamana Moorthaye,
Mitha jagat preeithayaa jitharaye,
Nigama Vak pathaye Vatave Nama.

14.Sri bhoomi sahitham divyam, Mukthaa hara vibhooshitham ,
Nammami vamanam thwam,
Bhukthi mukthi vara pradam.

15. Vamano budhi dathaa cha dravayastho vamana smrutha,
Vamana stharakobhabyaam , Vamanaaya namo nama.

Thursday, May 30, 2019

Kamadenu maha mantra



காமதேனு மஹா மந்திரம்

ஸர்வ காமதுதே தேவி ஸர்வ தீர்தீபிஷேசினி ||

பாவனே ஸுரபி ஸ்ரேஷ்டே தேவி துப்யம் நமோஸ்துதே ||

Friday, November 16, 2018

உத்தான ஏகாதசி/ uthana Ekadashi

(19-11-18) உத்தான ஏகாதசி தொடர்பான ஒரு அரிய பதிவு!

வருடத்தில்... மூன்று ஏகாதசிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யர்கள்.

கைசிக ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி, உத்தான ஏகாதசி ஆகிய மூன்று ஏகாதசிகளும் மிக மிக முக்கியமான நாட்கள் என்று ஆச்சார்யர்களால்
போற்றப்படுகின்றன.

(18-11-18) மதியம் 11-52 முதல் திங்கட்கிழமை மதியம் 12-57 முடிய உத்தான ஏகாதசி திதி அமைந்துள்ளது.

எனவே திங்கட்கிழமை(19-11-18) உத்தான ஏகாதசி விரதம் இருந்து,மதியம் 12 மணிக்குள் பெருமாள் கோவிலுக்கு மகாவிஷ்ணுவை வழிபடுவோர் மகத்தான பலன்களைப் பெற்று மகோன்னதமாக வாழ்வார்கள் என்பது உத்தான ஏகாதசியின் சிறப்பாகும்.

(19-11-18)
உத்தான ஏகாதசி விரதம் இருப்பது, வீட்டின்  தரித்திர நிலையை மாற்றிவிடும்.

வீட்டில் சுபிட்சம் நிலவும்.

கூடுமானவரை, உத்தான ஏகாதசி விரதத்தை முறையாக அனுஷ்டிப்பது உத்தமம்.

இயலாதவர்கள், வயதானவர்கள் பால், பழம், மிதமான உணவுகள் எடுத்துக் கொள்ளலாம், தவறில்லை.
இனரு தினம்(19-11-18) மதியம் 12-57 முடிய உத்தான ஏகாதசி திதி இருப்பதால் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு மதியம் 12.00 மணிக்குள் சென்று பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வழிபடுவதால் எல்லா நல்ல விஷயங்களும் உங்களைத் தேடி வரும்.

மிக முக்கியமாக, நாளைய உத்தான ஏகாதசி நாளில், துளசி தீர்த்தத்தைப் பருகுவது, அத்தனைப் புண்ணியங்கள் கொண்டது என்கிறது சாஸ்திரம்.

ஆகவே,நாளை உத்தான ஏகாதசியில் விரதம் மேற்கொள்ளுங்கள். இயலாதவர்கள் மறக்காமல் துளசித் தீர்த்தம் பருகுங்கள்.

கார்த்திகை மாத வளர்பிறையில் தோன்றக்கூடிய உத்தான ஏகாதசி ஒருவரின் அனைத்து பாவங்களையும் எரித்து சாம்பலாக்குகிறது.

ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் செய்வதாலும், நூறு ராஜசூய யாகங்கள் செய்வதாலும் அடையக் கூடிய பலனை ஒருவர் இந்த உத்தான ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதாலேயே அடையலாம்.

இந்த உத்தான ஏகாதசி ஒருவருக்கு, காணாதவை, விரும்பாதவை மற்றும் மூவுலகங்களிலும் அரிதானவை போன்ற அனைத்தையும் அளிக்கிறது.

இந்த உத்தான ஏகாதசி மந்தார மலை அளவிற்கு உள்ள கடுமையான பாவங்களையும் எரித்து சாம்பலாக்குகிறது.

இந்த உத்தான ஏகாதசியன்று புண்ணியத்தை சேர்ப்பவர் சுமேரு மலைக்கு ஈடான அளவு பலன்களை அடைவார்.

உத்தான ஏகாதசி விரதத்தை முழு நம்பிக்கையுடன் அனுஷ்டிப்பவரின் நூறு பிறவிகளின் பாவ விளைவுகள் அனைத்தும் மறைந்துவிடும்.

ஒருவர் உத்தான ஏகாதசியின் இரவு(18-11-18) முழுவதும் விழித்திருந்து விஷ்ணு வழிபாடு செய்வதால் அவருடைய முற்கால, நிகழ்கால மற்றும் வருங்கால தலைமுறைகள் அனைவரும விஷ்ணுவின் பரமத்தை அடைவர்.


கார்த்திகை மாத வளர்பிறையில் வரும் உத்தான ஏகாதசியன்று
ரோஜா மலர்களால் பகவான் விஷ்ணுவை வழிபடுபவர்கள் நிச்சியமாக முக்தி அடைவார்கள்.

கார்த்திகை மாத  வளர்பிறையில் வரும் ஏகாதசி என்பது 'ப்ரபோதினி' அல்லது 'உத்தான ஏகாதசி' ஆகும்.

பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள பெருமாள், இந்த உத்தான ஏகாதசி அன்றுதான் விழித்தெழுகிறார்.

எனவே இந்த உத்தான ஏகாதசி நாளில் மஹாவிஷ்ணுவையும் துளசிதேவியையும் வழிபடுவது மிகவும் விசேஷம்.

 (19-11-18)உத்தான ஏகாதசி நாளில் மதியம் 12.00 மணிக்குள் பெருமாள் கோயில் தீர்த்தத்தை அருந்துவது மகத்தான புண்ணியம் கொண்டது என்கிறது சாஸ்திரம்.

 (19-11-18)உத்தான ஏகாதசி நாளில் அதிகாலையில் குளித்து முடித்து வீட்டில் பூஜையறயில் உள்ள பெருமாள் படம் முன்பாக அமர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்தால் சகல சத்விஷயங்களையும் அடைவீர்கள் என்பது உறுதி.

விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்ய தெரியாதவர்கள் விஷ்ணு சஹஸ்ரநாம ஒலி நாடாவினை
கேட்டுக்கொண்டே பெருமாளை வழிபடலாம்.

அதுவும் முடியாதவர்கள் சிவ பெருமானால் பார்வதி தேவிக்கு உபதேசிக்க பட்ட கீழ்கண்ட எளிமையான ஸ்ரீ ராம மந்திரத்தை ஜெபிக்கலாம்.

ஸ்ரீ ராம மந்திரம்

"ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம்
ஸ்ரீ ராம நாம வரானனே".

இந்த மந்திர ஸ்லோகத்தில் மூன்று முறை "ராம" என்ற நாமம் வருகிறது.

ராம நாமம் தாரக நாமம்.

அதாவது த்ரேதா யுகம் முடிந்து த்வாபர யுகம் முடிந்து கலியுகத்தில் ஸ்ரீ ராமனின் நாமத்தை அனுதினமும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்,கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

அதுதான் ராம நாமத்தின் மகிமை.

ராம என்பவை இரண்டு அக்ஷரங்கள்.

நாராயணா என்ற நாமத்திலிருந்து "ரா" அக்ஷரத்தை முதல் அக்ஷரமாகவும்,
நமசிவாய என்ற நாமத்திலிருந்து
"ம" அக்ஷரத்தை இரண்டாவது அக்ஷரமாகவும் இந்த ராம நாமத்தில் உள்ளது.

"ரா" என்பது அக்னி பீஜம்.

"ம" என்பது அம்ருத பீஜம்.

"ரா" என்ற உச்சரித்ததும் நம்முடைய அனைத்து பாபங்களும் நம்மை விட்டு விலகி விடுகிறது.

"ம" என்று உச்சரித்ததும் பாபங்கள் ஏதும் நம்முள் செல்லாமல் தடுக்கப்படுகின்றது.

இந்த எழுத்துக்களுக்கு இணையாக எண்கள் உள்ளன.

"ர" என்ற எழுத்துக்கு எண் 2ம்,
"ம" என்ற எழுத்துக்கு எண் 5ம் ஆகும்.

மேலே ஸ்லோகத்தில் "ராம" என்ற நாமம் மூன்று முறை வருகின்றது.

 அதாவது 2X5 2x5 2x5. என்றால் 2X5=10x2=20x5=100x2=200x5=1000 ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.

இதுதான் இந்த ராம நாமத்தின் அற்புதம்.

இந்த கார்த்திகை மாத வளர்பிறை "உத்தான ஏகாதசி" நாளன்று கிடைக்கும் அனைத்து பழங்களையும் விஷ்ணு பகவானுக்கு
நிவேதனம் செய்து வேண்டிக் கொண்டால் மங்கள வாழ்வு மலரும், பூலோகத்திலேயே சொர்க்க வாழ்வு கிடைக்கும்.

ஆகவே, உத்தான ஏகாதசி நாள் ஆன 19-11-18 அன்று விரதம் மேற்கொண்டு விஷணுவை வழிபடுங்கள்,
முக்தியடையுங்கள்.

Thursday, October 18, 2018

பாபங்குச ஏகாதசி/ paapangusa ekadashi

பாபங்குச ஏகாதசி 20.10.2018
If a person strictly observes Papankusha Ekadasi, hundreds of his ancestors are taken by Garuda to the spiritual world, where they attain their original, four-armed, transcendental forms.


பாபங்குச ஏகாதசி
(ஆஸ்வீன மாதம் -  சுக்ல பட்ச ஏகாதசி)

அக்டோபர் மாதம் 20ம் தேதி, ஆஸ்வீன மாதம், சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி திதியை பாபங்குச ஏகாதசியாக‌ கொண்டாடுவர். பாபங்குச ஏகாதசி விரத மகிமையை நாம் காண்போம்.
 யுதிஷ்டிரர் கிருஷ்ண பரமாத்மாவிடம், " ஓ மதுசூதனா, ஏகாதசி மஹாத்மியத்தில் அடுத்ததாக ஆஸ்வீன மாதத்தின் சுக்ல பட்ச ஏகாதசியின் பெயர், விரதம் அனுஷ்டிப்பதன் பயன், மஹிமை பற்றிய கருணை கூர்ந்து விவரமாக கூறுங்கள்." என்று வேண்டுகோள் விடுத்தார்.

பரம்பொருளான ஸ்ரீகிருஷ்ணர் பதிலளிக்கையில்," ராஜன், பாவங்கள் அனைத்தையும் நீக்கும் ஏகாதசி விரத மஹிமையை உனக்கு சொல்கிறேன், கவனமாக கேள். ஆஸ்வீன மாதத்தின் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி பாபங்குச ஏகாதசி என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. அன்று, அனந்தசயனத்தில் வீற்றிருக்கும் சுவாமி பத்மநாபரை விதிமுறைப்படி பூஜை செய்து வணங்க வேண்டும். அதன் மூலம், இவ்வுலக வாழ்க்கையில் வேண்டுவன எல்லாம் பெற்று சுக,போகமாக வாழ்வதுடன், மரணத்திற்குப் பின், மோட்சப்பிராப்தியையும் பெறுவர்.

ஐம்புலனையும் அடக்கி நீண்ட நெடுங்காலம் தவத்தால் பெறக்கூடிய புண்ணிய பலனை, விரத வழிமுறைப்படி ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்து, கருட வாகனத்தில் சஞ்சரிக்கும் பகவான் மஹாவிஷ்ணுவை சேவிப்பதால் ஒருவர் பெறலாம். அளவிலா கடும் பாவங்களைப் புரிந்திருந்தாலும், பாவங்களை அழித்து பக்தர்களைக் காக்கும் பரம்பொருளான ஸ்ரீஹரியை வணங்குவதன் மூலம், நரகத்தின் தண்டனையிலிருந்து விடுபடலாம். இப்புவியின் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதால் கிடைப்பதன் புண்ணிய பலனை, பகவான் மஹாவிஷ்ணுவின் திருநாமத்தை ஜபித்தால் ஒருவர் பெறலாம்.  பகவானின் புனித திருநாமங்களான ராம், விஷ்ணு, ஜனார்த்தனன், கிருஷ்ணன், இவற்றில் ஏதாவது ஒன்றை ஜபிப்பவர், மரணத்திற்குப் பின் எமதர்மராஜன் இருப்பிடமான எமலோகத்தை காண மாட்டார். எனக்கு மிகவும் பிடித்த இந்த பாபங்குச ஏகாதசியை அனுஷ்டிக்கும் பக்தர்களும் எமலோகத்தைக் காண மாட்டார். சிவநிந்தனை செய்யும் வைஷ்ணவர்களும், மஹாவிஷ்ணுவையை நிந்திக்கும் சைவர்களும் நிச்சயம் நரகத்தை அடைவர். நூறு அஸ்வமேத யாகம் மற்றும் நூறு ராஜசூய யாகம் செய்வதால் கிட்டும் புண்ணிய பலனானது, இப்புனித ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதால் கிடைக்கும் புண்ணிய பலனில் பதினாறில் ஒரு பங்கிற்கு சமமானதாகும்.

ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதால் கிட்டும் புண்ணிய பலனை விட மேலான புண்ணியம் வேறு எதுவும் கிடையாது. பாவங்களை நீக்கி மோட்சப்பிராப்தி அளிப்பதில், அனந்தசயன பத்மநாப பூஜைக்கு உகந்த நாளான பாபங்குச ஏகாதசிக்கு இணையான நாள் இம்மூவுலகிலும் இல்லை. " ஒ ராஜன்,  ஸ்வாமி பத்மநாபருக்கு உகந்த நாளான பாபங்குச ஏகாதசியன்று  உபவாசத்துடன் விரதம் அனுஷ்டிக்கும் வரை, எப்படி பத்தினி தன் கணவனை விட்டு இணைபிரியாமல் இருக்கிறாளோ, அதே போல்,  பாபங்களும், முற்பிறவி பாவவினைகளின் விளைவுகளும் ஒருவரை விட்டு அகலுவதில்லை.
பாபங்குச ஏகாதசி விரத புண்ணியத்திற்கு இணை இம்மூவ்வுலகிலும் இல்லை. நம்பிக்கையுடன் விரதத்தை அனுஷ்டிப்பவர் மரணத்திற்கு பின்னர் யமதர்மராஜனை காண வேண்டிய அவசியமில்லாமல் விஷ்ணு தூதர்களால் ஸ்ரீ ஹரியின் இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார். வாழ்விற்குப் பின் மோட்சப்பிராப்தி, சொர்க்கலோக வாசம், திடமான ஆரோக்கியம், அழகான பெண்கள், தனம், தான்யம் இவற்றை விரும்புவர் பாபங்குச ஏகாதசியன்று விரதம் அனுஷ்டித்தால்  விரும்பியது அனைத்தும் பெறுவர்.

"ஓ, ராஜன் !, கங்கை, கயா, காசி, புஷ்கரம், மேலான குருக்ஷேத்ரம் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று தீர்த்தங்களில் நீராடி, பகவானை வணங்குவதால் கிட்டும் புண்ணியத்தை விட மேலான பலனை அருளும் சக்தி வாய்ந்தது பாபங்குச ஏகாதசி.  ஓ மஹாராஜ் யுதிஷ்டிரா ! புவியை காப்பவரே, பகலில் உபவாசத்துடன் விரதத்தை மேற்கொண்டு, இரவில் கண்விழித்து பகவத்நாம ஸ்மரணம், புராணம், பாகவதம் படித்தல், கீர்த்தனை ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். இப்படி விரதத்தை பூரணமாக கடைப்பிடிப்பவர் மரணத்திற்குப் பின் விஷ்ணு லோகத்தை அடைவர். அதுமட்டுமல்லாமல், தாய், தந்தை மற்றும் மனைவி வழியின் பத்து தலைமுறை முன்னோர்களும் மோட்சப்பிராப்தியை அடைவர். 

மோட்சப்பிராப்தி பெறுவதுடன், முன்னோர்கள் அனைவரும் பூவுலக பிறப்பிற்கு முன் ரூபமான வைகுண்ட ரூபத்தை அடைகின்றனர். மஞ்சள் பட்டாடையில், அழகிய ஆபரணத்துடன்,  நான்கு திருக்கரங்கள் கொண்டு கருட வாகனத்தில் ஸ்ரீ ஹரியின் இருப்பிடமான வைகுண்டத்திற்குச் செல்வர். இது பாபங்குச ஏகாதசியை நன்முறையில் அனுஷ்டிப்பதால் பக்தர்களுக்கு கிட்டும் பலனாகும்.  ஒ அரசர்களில் தலைசிறந்தவரே!, குழந்தை, இளைஞர் அல்லது முதிய வயதினர், யாராக இருந்தாலும், பாபங்குச ஏகாதசி விரதத்தை மேற்கொள்வதால் அவர்களின் சகல பாபங்களும் நீங்கி, மறுபிறவி என்னும் சக்கரத்திலிருந்து விடுதலை பெறுவர். அன்று உபவாசம் இருப்பது மிகவும் சிறப்பானது மட்டுமன்றி வைகுண்ட பிராப்தியை அளிக்கும் சக்தி வாய்ந்தது. தங்கம், எள், விளைநிலம், பசுக்கள், தான்யம், குடிநீர், குடை, ஜோடி செருப்பு ஆகியவற்றை பாபங்குச ஏகாதசியன்று தானம் அளிப்பவர் யமலோகம் காண வேண்டிய அவசியமில்லாமல் போகும். ஆனால் இப்புவியில் இத்தகு   தானம் செய்யாமல் குறிப்பாக ஏகாதசியன்று உபவாசம் அனுஷ்டிக்காமல் இருப்பவர்களின் சுவாசமானது கொல்லன் பட்டறையில் துருத்தியில் இருந்து வெளிவரும் காற்றினை ஒத்தது.

"ஓ, அரசர்களில் சிறந்தவனே! பாபங்குச ஏகாதசியன்று, ஏழை, எளியவரும் காலையில் முதலில் குளித்து அவரவர் வசதிக்கு ஏற்ப தானம் தர்மம் செய்து, பிறகு பிற சுப காரியங்களை தங்கள் திறனுக்கு ஏற்ப செய்ய வேண்டும். பிறர் நன்மைக்காக யாகம், குளம், ஒய்விடங்கள், தோட்டம், சத்திரம் ஆகியவற்றை அமைப்பவர் யமதர்மனின் தண்டனையிலிருந்து விடுபடுவர். இப்பிறவியில் நீண்ட ஆயுள், செல்வந்தர், உயர்ந்த குலத்தில் பிறப்பெடுத்தல், நோய், நொடி இன்றி திடமான ஆரோக்கியம் ஆகியவற்றை பெற்றவர் தனது முற்பிறவியில் இத்தகைய நற்கர்மங்களை செய்ததால் அவற்றைப் பெற்றவர் ஆகிறார். ஆனால் பாபங்குச ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பவர் பரம்பொருளான விஷ்ணுவின் இருப்பிடமான வைகுண்டத்தை அடைவர்."

முடிவில், ஸ்ரீ கிருஷ்ணர் -" புனித யுதிஷ்டிரா, இதுவே சுபமான பாபங்குச ஏகாதசியின் மஹிமையாகும்" என்றருளினார்.

பிரம்ம வைவர்த்த புராணம், ஆஸ்வீன மாதம், சுக்ல பட்ச ஏகாதசி அதாவது  பாபங்குச ஏகாதசி என்று அழைக்கப்படும் ஏகாதசியின் மஹிமையை விவரிக்கும் படலம் முடிவுற்றது.

ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே.
ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே

21.10.2018 prana time(sunday) 06.00 to 09:55